search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமுக்கம் மைதானம்"

    • செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் தமுக்கம் மைதானத்தில் வைத்து தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க பிரபலங்களும் மேடைப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் மதுரையில் தற்போது நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டிருந்தார்.

    ராமர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்தோம், அவருக்கென்று தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை, பர்வீன் சுல்தானா பேசிய பிறகு சிறிது நேரம் அவர் பேசுவார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியில் புத்தகம் சார்ந்த எழுத்து சார்ந்த நபர்களை அழைக்காமல் தொலைக்காட்சி பிரபலங்களை அழைப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்கவில்லை மாட்டார் என்று கூறப்படுகிறது. 

    • மதுரை தமுக்கம் கட்டுமான பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலாச்சார மையம் தயாராகி வருகிறது.

    மதுரை

    மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலாச்சார மையம் தயாராகி வருகிறது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் இன்று காலை தமுக்கம் மைதானத்திற்கு வந்தனர்.

    அங்கு தமுக்கம் கலாச்சார மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். அவர்களுடன் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன் இருந்தார். தமுக்கம் மைதானத்தில் அமைய உள்ள கலாச்சார மையத்தை புதிய அம்சங்களுடன் வரலாற்றை நினைவு கூறும் வகையில் பொலிவூட்டுவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து சிவதாஸ்மீனா, பொன்னையா ஆகியோர் எல்லீஸ் நகருக்கு சென்றனர்.

    அங்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×